Categories: Business

HNBஇன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்

இலங்கையின் தனியார்துறை வங்கியியல்துறையின் முன்னோடியும் முன்மாதிரியுமான HNB, அதன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலைலயத்தை இல. 111, ஹொரணவீதி, பண்டாரகம எனும் புதிய முகவரியில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்ததன் மூலம், தனது நீண்டகாலத் துறைசார் தலைமைத்துவத்தில் மற்றுமொரு மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது.

HNBஇன் நிறைவேற்றுத்துணைத் தலைவரும் கிளைவலையமைப்பு வணிகப்பிரதானியுமான  சுபுன்டயஸ், பண்டாரகம பிரதேச செயலாளர் திஸ்னா ஜயசிங்க மற்றும் HNBஇன் தென்மேற்கு பிராந்திய வணிகப்பிரதானி ஈஷான் ஜயரத்ன ஆகியோருடன் வங்கியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எனப் பலரும் இந்தத்திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு. சுபுன்டயஸ், சமூகத்துடனான வங்கியின் நீண்டகால உறவு குறித்துக்கருத்துத்தெரிவிக்கையில்: “எமது கிளை வலையமைப்பில், இலட்சியம், தொழில் முயற்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் மையமாக பண்டாரகம ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடமாற்றமானது, எமது வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒருசூழலில் அவர்களுக்குச் சேவையாற்றவும், அவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளுக்கு வலுசேர்க்கும் வகையிலான உயர்தரவங்கியியல் தீர்வுகளை வழங்கவும் எமக்கு வழிவகுக்கிறது, ”எனத்தெரிவித்தார். “வசதி, இணைப்பு மற்றும் அக்கறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதியவளாகத்தை அனுபவிக்குமாறு எமது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் ஏனைய பொது மக்களுக்கும் நாம் அன்புடன் அழைப்புவிடுக்கின்றோம்,” எனகூறினார்.

விசாலமான மற்றும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வளாகம், விரைவான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வங்கி நிபுணர்களை இலகுவாக அணுகக் கூடிய வசதிகள் மூலம் வாடிக்கையாளர் சேவைகளை எளிதாக்குகின்றது. வங்கியியல் சிறந்து விளங்குவதற்கு வலுவான உறவுகளே மிக முக்கியம் என்ற HNBஇன் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்வகையில், வாடிக்கையாளர்களுடன் ஆழமான ஈடுபாட்டை ஏற்படுத்தும் விதத்தில் இந்த இட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

7 News Pulse

Recent Posts

Altair Showrooms: Strategically Chosen by the World’s Leading Automotive Brands

Altair’s prominence on Colombo’s skyline is now mirrored at street level. A growing number of…

9 hours ago

Siyapatha Finance Continues Mission to Conserve Sri PadaReserve

In an effort towards the sustainable conservation and preservation of Sri Pada Reserve, one of…

9 hours ago

Seylan Bank reports record Profit after Tax (PAT) of LKR 12.1 Bn in 2025

Profit before Income Tax - LKR 19.6 Bn up by 22.3% Profit after Tax –…

9 hours ago

செயல்பாட்டுத் திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி உலகளாவிய ISO 22301 தரச்சான்றிதழைப் பெற்ற HNB

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, தனது வணிகத் தொடர்ச்சியான முகாமைத்துவ அமைப்பிற்காக (Business Continuity Management System)…

9 hours ago

Prime மற்றும் Melwa இணைந்து Port City Colombo இல் 4 ஏக்கர் உயர்தரகாணியை அமெ.டொ. 57.6 மில். பெறுமதியில் கையகப்படுத்தியுள்ளது.

Prime மற்றும் Melwa குழுமங்கள், இலங்கையின் இரு பெரும் வர்த்தக ஜாம்பவான்கள் இணைந்து, நாட்டின் மிகவும் தொலைநோக்குடைய நகர்ப்புற அபிவிருத்தி…

9 hours ago

இலங்கையில் முதன்முறையாக BYD மற்றும் DENZA வாகனங்களுக்கான பிரத்தியேக காட்சியறை கொழும்பு Altair-இல் திறப்பு

இலங்கையின் மிகவும் பிரபலமான புதிய சக்தி வாகன (NEV) வர்த்தக நாமமான BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக…

9 hours ago