Categories: Business

Janashakthi Finance relocates Nugegoda branch to enhance customer convenience and accessibility ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் அணுகலை மேம்படுத்த அதன் நுகேகொடை கிளையை இடமாற்றம் செய்துள்ளது

JXG (ஜனசக்தி குழுமம்)இன் உறுப்பினரான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, அதன் நுகேகொடை கிளையை இலக்கம். 136/5, S. De S. ஜயசிங்க மாவத்தை, நுகேகொடை என்னும் முகவரிக்கு இடம் மாற்றியுள்ளது. இப் புதிய இடம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அணுகக்கூடியதும் நட்புறவானதுமான சூழலை வழங்குவதோடு வாடிக்கையாளர்களுக்கான சௌகரியத்தையும் சேவைச் சிறப்பையும் மேம்படுத்தும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றது

கொழும்பின் பரபரப்பான நகர்ப்புறத்தின் மையத்தில் அமைந்துள்ள இப் புதிய வளாகம், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அணுகல் மற்றும் முன்னேற்றகரமான வசதிகளை வழங்குவதால் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் சேவைகளை மிகவும் வசதியான மற்றும் பயனுறுதிமிக்க சூழலில் பெற்றுக் கொள்ளலாம்.

இக்கிளையானது தொடர்ந்தும்வைப்புகள், சேமிப்புக்கணக்குகள், லீசிங், தங்கக்கடன்கள், மாற்றுநிதித்தீர்வுகள்,  கூட்டு நிறுவன மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவன நிதியுதவிகள் உள்ளிட்ட விரிவான சேவைத் தொகுதியோடு தனிநபர் மற்றும் வணிகத் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தனிப்பயன் நிதிச் சேவைகளையும் வழங்கி வருகிறது.

திறப்பு விழாவில் கருத்துத் தெரிவித்த ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன், “எங்கள் கிளைகள் அமைந்துள்ள இடங்களைத் தீர்மானிக்கும் போது வாடிக்கையாளர் வசதியும் அணுகலும் முக்கிய முன்னுரிமையாகும். நுகேகொடை செறிந்தமக்கள்தொகையை கொண்ட சுறுசுறுப்பான வணிக மையமாகும். இந்த இடமாற்றம் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் அதேவேளை சேவைத் தரத்தையும் உயர்த்த உதவுகிறது. எமது சமூகத்தின் தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் நிதி அபிலாஷைகளை நிறைவேற்ற உதவுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என்றார்.

“எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் உறுதியாக உள்ளனர். நுகேகொடை ஊழியர் குழு தொழில்முறை சேவை, வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான செயன்முறை நேரத்தை உறுதி செய்யும். இதன் மூலம் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு தங்கள் நிதி இலக்குகளை நம்பிக்கையுடன் அடைய தேவையான ஆதரவு கிட்டும்.” என ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் வழிமுறைகளின்(Channels) தலைவர் சமிந்த ரத்நாயக்க கூறினார்.

நாடெங்கிலும் விரிந்த கிளை வலையமைப்பைக் கொண்டுள்ள ஜனசக்தி பைனான்ஸ் இலங்கை முழுவதும் தனது இருப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகள் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்கு நிறுவனம் பங்களித்து வருகிறது.

7 News Pulse

Recent Posts

Seylan Tikiri Brings Back Student Savings Centre at S. Thomas’ Preparatory School

Seylan Tikiri proudly revived the Tikiri Student Savings Centre at S. Thomas’ Preparatory School during…

3 hours ago

உலக வாய் சுகாதார தினம் 2026 நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ அனுசரணையாளராக Haleon நிறுவனம்தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் கூட்டாண்மை

1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கிவரும்  முதலாவது பல்தேசிய மருந்து நிறுவனமான GlaxoSmithKline Healthcare என உத்தியோகபூர்வமாக அறியப்படும் பனடோல்,…

3 hours ago

Prime Group இளைஞர்களின் விருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் Battle of the Blues மற்றும் Maroons சமர் போட்டிகளின் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக தொடர்ந்தும் அனுசரணை

Prime Group, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் 30 வருட கால சிறப்பைக் கொண்டாடும் தருணத்தில், சமூக மற்றும் இளைஞர்…

3 hours ago

The Digital Leapfrog: Why the Next Era of Economic Agency for Women is On-Chain

By Rachel Conlan, Global Chief Marketing Officer at Binance For decades, financial inclusion was measured…

3 hours ago

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த சொகுசு விடுதி City of Dreams Sri Lanka-இற்கு வலுச்சேர்க்கும் பெண்கள்

இந்தச் சர்வதேச மகளிர் தினத்தில் உள்ளடக்கம், தலைமைத்துவம் மற்றும் வாய்ப்புகள் குறித்து City of Dreams Sri Lanka பெருமிதம்…

3 hours ago

டிஜிட்டல் யுகத்தை ஆதரிக்கும் வகையில் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தும் சன்ஸைன் ஹோல்டிங்ஸ்

பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், முழு குழுமத்திற்கும் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது,…

3 hours ago