Categories: Business

Kotler’s Essential of Modern Marketing இல் Prime Group இன்ரியல் எஸ்டேட்டின் மரபு உள்ளடக்கம்

பல தசாப்த கால நம்பிக்கை: Prime Group இன் கதை தற்போது முழு உலகுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது

இலங்கையின் முன்னணி மற்றும் பெருமளவு விருதுகளை வென்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Group, உலகப் புகழ்பெற்ற சந்தைப்படுத்தலின் தந்தை என அறியப்படும் Prof. Philip Kotler இன் ‘Essentials of Modern Marketing (EOMM)’ இலங்கை பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரே ரியல் எஸ்டேட் வர்த்தக நாமம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது. இந்த கௌரவிப்பு, Prime Group இன் சந்தைப்படுத்தல் மூலோபாயங்களை சர்வதேச நேர்வுபற்றிய ஆய்வு நிலைக்கு உயர்த்தியுள்ளதுடன், ரியல் எஸ்டேட் சந்தைப்படுத்தல் சிறப்பிற்பாக சர்வதேச அடையாளமாக நிறுவனத்தை நிலை நிறுத்தியுள்ளது. இந்த உள்ளடக்கம் Prime Group ஐ நாட்டின் பொருளாதார மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்காற்றும் முக்கிய வர்த்தக நாமங்களின் வரிசையில் திகழச் செய்துள்ளது.

தொழிற்துறை முன்னோடி எனும் நிலையை மூன்று தசாப்த காலமாக Prime Group கொண்டாடும் நிலையில், இந்த கௌரவிப்பு கிடைத்துள்ளதுடன், தொழிற்துறை நியமங்களை பின்பற்றுவதற்கு பதிலாக, தொடர்ச்சியான முன்னேற்றகரமான சந்தைப்படுத்தல் வழிமுறைகளை கட்டியெழுப்பியிருந்தமையை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. வர்த்தக நாம நிலைப்படுத்தல் மற்றும் புத்தாக்கமான சந்தை தலைமைத்துவம் போன்றவற்றில் மூலோபாயத் தொடர்ச்சித் தன்மை போன்றன, Prime Group ஐ அதன் 30 வருட கால பயணத்தில் வழிநடத்தியுள்ளன. வர்த்தக நாமம் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை மற்றும் தங்கியிருக்கும் திறன் ஆகியவற்றையும் இந்த உள்ளடக்கம் வெளிப்படுத்தியுள்ளது. விசேட இலங்கை பதிப்பினூடாக, Prime Group இன் கதை முழு உலகுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Prime Group இன் இணைத் தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “போராசிரியர் Philip Kotler இனால் இந்த முக்கியத்துவம் வாய்ந்த பதிப்பில் கௌரவிக்கப்பட்டுள்ளமை விசேட உயர் கௌரவமாக அமைந்துள்ளதுடன், எமது வர்த்தக நாமத்தின் வலிமையை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது. Prime Group இல், நாம் போக்குகளை ஒருபோதும் பின்பற்றுவதில்லை, மாறாக அவற்றை உருவாக்குகிறோம். மூன்று தசாப்தங்களாக, Prime இனால் புத்தாக்கமான சந்தைப்படுத்தல் உத்திகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Prime Premier, புதிய சொத்து ஹொட்லைன் மற்றும் புரட்சிகரமான கொடுப்பனவுத் தீர்வுகள் போன்ற திட்டங்கள் அடங்கியுள்ளன. இவற்றினூடாக இலங்கையர்கள் எவ்வாறு ரியல் எஸ்டேட்டை அணுகுகின்றனர் மற்றும் அனுபவிக்கின்றனர் என்பது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்று, நாம் இல்லங்களை நிர்மாணிப்பதற்கு மேலதிகமாக, சமூகங்களை உருவாக்குவதிலும், அனுபவங்களை ஏற்படுத்தல் மற்றும் நிலைத்திருக்கும் மரபுகளை கட்டியெழுப்புவதிலும் பங்களிப்புகளை வழங்குகிறோம். உலகின் முன்னணி சந்தைப்படுத்தல் அதிகார அமைப்பினால் கௌரவிப்பைப் பெற்றுள்ளமையானது, சந்தைப்படுத்தல் சிறப்பில் எமது ஒப்பற்ற அர்ப்பணிப்பையும் புத்தாக்கத்தில் எமது நிபுணத்துவத்தையும் உறுதி செய்துள்ளது.” என்றார்.

Kotler இன் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சந்தைப்படுத்தல் பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை என்பது, ஒரு வர்த்தக நாமம் எய்தக்கூடிய உயர் கௌரவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. புத்தாக்கம், வாடிக்கையாளர் மையப்படுத்திய தன்மை மற்றும் வர்த்தக நாம தலைமைத்துவம் ஆகியவற்றில் Prime Group இன் அர்ப்பணிப்பை இந்த கௌரவிப்பு உறுதி செய்துவதுடன், இலங்கையர்கள் எவ்வாறு வாழ்வது மற்றும் முதலீடு செய்வது ஆகியவற்றை வெளிப்படுத்தி, திருப்திகரமான வாடிக்கையாளர்களினூடாக பல தசாப்த கால நம்பிக்கையை எவ்வாறு சம்பாதித்துள்ளது என்பதை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.

30 வருடங்களுக்கு மேலான மரபைக் கொண்டு, 45 க்கும் அதிகமான தொடர்மனைத் திட்டங்களையும், 30க்கும் அதிகமான விலாத் திட்டங்களையும், மேலும் 10,000 க்கும் அதிகமான திட்டங்களை நாடு முழுவதிலும் பூர்த்தி செய்துள்ள Prime Group, இலங்கையின் ரியல் எஸ்டேட்டில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய வண்ணமுள்ளது. சர்வதேச சந்தைப்படுத்தல் அந்தஸ்தை எய்துவதில் Kotler இன் பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளமை மேலும் வலுச் சேர்த்துள்ளது.

இடமிருந்து – Kotler’s Essentials of Modern Marketing இலங்கை பதிப்பு அறிமுக நிகழ்வில், Prime Group இன் இணை ஸ்தாபகரும், இணை-தலைமை அதிகாரியுமான சந்தமினி பெரேரா, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். பேராசிரியர். நளின் அபேசேகர, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, Deyo Brand Consultancy ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் Kotler Impact இலங்கை மற்றும் மாலைதீவுகள் தேசிய பிரதிநிதி டென்சில் பெரேரா மற்றும் Prime Group இன் இணை ஸ்தாபகரும், இணை தவிசாளருமான பிரேமலால் பிராஹ்மனகே ஆகியோர் காணப்படுகின்றனர்.

22 ஆகஸ்ட் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில், Kotler Impact Inc. மற்றும் Deyo Consultancy and Advisory ஆகியன இணைந்து அறிமுகம் செய்திருந்த இலங்கை பதிப்பு, முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சாதனையாக அமைந்திருப்பதுடன், Kotler இன் பெருமைக்குரிய நாடு அடிப்படையிலான வெளியீடுகளில் ஒன்றாகவும் இணைந்துள்ளது. ‘Essentials of Modern Marketing’தொடர், சமகால சந்தைப்படுத்தலை வரையறுக்கும் சமீபத்திய போக்குகள், மூலோபாயங்கள் மற்றும் வெற்றிகரமான கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருப்பதால் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. மேலும் இப் புதிய பதிப்பின் மூலம், இலங்கை சர்வதேச சந்தைப்படுத்தல் பகுதியில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் மற்றும் ஊக்கமளிக்கும் வணிக சமூகத்தைக் உள்ளடக்கிய நாடாக தனது நிலையை உறுதி செய்துள்ளது.

7 News Pulse

Recent Posts

பேபிசெரமி அறிமுகப்படுத்தும் இலங்கையின் முதலாவது Generative AI ‘Baby Cheramy Diaper Helpdesk’ 24/7 நம்பிக்கைக்குரிய குழந்தை வளர்ப்பு பங்காளி

இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI…

2 days ago

Autodesk Strengthens Commitment to Driving Innovation and Sustainability in Sri Lanka’s Construction Sector

Autodesk, together with its Value-Added Distributor Redington, recently hosted the Autodesk AEC Digital Construction Showcase…

2 days ago

Parental Intelligence (PI): பெற்றோருக்கான இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு உதவியாளர்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை…

3 days ago

Nyne Hotels Immerses Travel Agents in Boutique Luxury Experience

Nyne Hotels, Sri Lanka’s exclusive collection of luxury boutique properties, recently hosted an experiential showcase…

3 days ago

Sri Lanka welcomes ‘Hello, to More’ as GWM and David Pieris Automobiles announce strategic partnership

Appoints DPA as an authorised distributor for GWM in Sri Lanka Launches hybrid and new…

3 days ago