From Vision to Reality Prime and Sanken redraw Colombo’s Border
இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளரான Prime Lands Residencies PLC, தனது புதிய நிர்மாணத் திட்டமான ‘The Colombo Border’ இன் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை, நிர்மாணத்துறையில் புகழ்பெற்ற நாமமான Sanken Construction (Pvt) Ltd க்கு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 1984 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட Sanken, நிர்மாணத்துறையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது.
சொகுசான வதிவிட ரியல் எஸ்டேட் பகுதியில் 2 மற்றும் 3 படுக்கை அறைகளைக் கொண்ட தொடர்மனைகளுடன், வரையறுக்கப்பட்ட 4- படுக்கை அறைகளைக் கொண்ட duplex penthouses களும் அடங்கியிருக்கும். வதிவோர் இளம் தொழில்நிபுணர்களின் வாழ்க்கைமுறைகளுக்கு பொருத்தமான நவீன அலங்காரம், உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் நவீன கட்டடக்கலை அம்சங்கள் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். வதிவிடத் தொகுதியில் 3 கோபுரங்கள் அமைந்துள்ளன. அதில் Brielle டவரை Sanken Construction நிர்மாணிக்கும்.
6 ½ காணிப் பகுதியில் அமையவுள்ள இந்தத் திட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவிலான பசுமையான திறந்த வெளிகள் அமைந்துள்ளதால், வசிப்போருக்கு நவீன வசிப்பதற்கான சௌகரியங்கள், இயற்கையுடன் இணைந்து வழங்கப்பட உள்ளன.
நிர்மாணத்துறையில் Sanken Construction பெருமளவு அனுபவத்தையும், உறுதியான கீர்த்தி நாமத்தையும் கொண்டுள்ளது. பாரிய சொகுசு அபிவிருத்தித் திட்டங்களை கையாண்ட அனுபவத்தையும் பெற்றுள்ளது. தரம் மற்றும் சிறப்பு போன்றவற்றுக்கான தனது அர்ப்பணிப்புக்காக அறியப்படும் Sanken, சிறந்த பகுதிகளுக்கான Prime Residencies இன் நோக்குடன் பொருந்தும் பல திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.
Prime Lands Residencies PLC இன் தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “The Colombo Border திட்டத்துக்காக Sanken Construction ஐ தெரிவு செய்கையில், உயர் நியமங்கள் மற்றும் சிறப்பு எனும் எமது நோக்குடன் பொருந்தும் ஒரு பங்காளரை நாம் எதிர்பார்த்தோம். தரம் மற்றும் நுணுக்கம் ஆகியவற்றில் Sanken கொண்டுள்ள கீர்த்தி நாமமானது, The Colombo Border திட்டம், வசிப்போருக்கு பிரத்தியேகமான அனுபவத்துடன், நவீன சௌகரியங்கள் நிறைந்த புதிய சொகுசு வாழிட அனுபவத்தை பெற்றுக் கொடுத்து அதற்கான புதிய கருதுகோளாக அமையும் எனும் உறுதியை எமக்கு வழங்கியிருந்தது.” என்றார்.
Sanken Construction (Pvt) Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் மேஜர். ரஞ்சித் குணதிலக குறிப்பிடுகையில், “The Colombo Border திட்டத்துக்காக Prime Lands Residencies உடன் நாம் கைகோர்த்துள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். ஒவ்வொரு செயற்திட்டத்தினதும் எதிர்பார்ப்பை விஞ்சி செயலாற்றுவதற்கு Sanken ஐச் சேர்ந்த நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த அபிவிருத்தித் திட்டத்தில் எமது நிபுணத்துவத்தை உள்வாங்கி, கொழும்பு நகரக் கட்டமைப்பில் மற்றுமொரு முக்கியமான உள்ளம்சத்தை சேர்க்க எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
இந்தத் திட்டத்துக்கான பைலிங் வேலைகள் தற்போது பூர்த்தியடைந்துள்ள நிலையில், பிரதான கட்டுமானப் பணிகள் விரைவாக முன்னேறி, 2027 ஆம் ஆண்டில் The Colombo Border கொழும்பில் பிரமாண்டமாக வெளிவரும்.
The Colombo Border பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.primeresidencies எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது 0710777333 தொடர்பு கொள்ளவும்.
At a time when environmental responsibility is no longer optional but imperative, Nyne Hotels takes…
15th Renovated Station in Sri Lanka Advances “Cleaner Energy, Better Life” Vision and Aligns with…
Colombo, Sri Lanka — 23 July 2025 A landmark gathering took place in Colombo this…
டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி…
பல தசாப்தங்களாக, இலங்கையில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC) தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதில்…
HNB Finance PLC தனது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளரின் நிதி பரிமாற்றங்களை மிகவும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், உலகில் எங்கிருந்தும்…