‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
அமெரிக்காவின் நடத்தை ஈரானை தூண்டும்விதமாக உள்ளது. எச்சரிக்கின்றார் ஈரானின் ஆன்மீக தலைவர்
அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டால் ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் என ஈரானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஆயத்தொல்லா அலி கமேனியின் ஆலோசகருமான அலி லரிஜானி இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது நடத்தையை மாற்றவேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். சாகோஸ் தீவின் டியாகோகார்சியா தளத்தில் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஈரான் மீது குண்டுவீசினால் அல்லது இஸ்ரேலை குண்டுவீச தூண்டினால் அவை ஈரான் வேறு விதமான முடிவை எடுக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தும் என அலி…

