அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள புதிய பரஸ்பர வரி – சாதக, பாதகங்களை கண்டறிய குழுவொன்றை நியமித்தார் ஜனாதிபதி
இலங்கையில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி நேற்று (ஏப்ரல் 02) அறிவித்துள்ள நிலையில், இந்த வரித்திட்டமானது நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 05ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டு சபை…

