தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, வட மத்திய, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடுமென திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலி, மாத்தறை, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் கடும் காற்றும் வீசக்கூடுமென தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில்…

