2025 දෙසැම්බර් 31 වන දිනයෙන් අවසන් වූ සම්පූර්ණ වර්ෂය සඳහා සැලකිය යුතු පිරිවැය ඉතිරියක් වාර්තා කරමින් සහ සියලු ප්රධාන අංශවල ස්ථාවර ක්රියාකාරීත්වයක් පෙන්නුම් කරමින්, ලාභය සැලකිය යුතු ලෙස වර්ධනය කරගනීමට SLT සමූහය සමත් වී තිබේ. අතිශය සැලකිලිමත් පිරිවැය කළමනාකරණය, මූල්ය පහසුකම් වියදම් අවම කරගැනීම සහ ක්රමෝපායික මෙහෙයුම් වැඩිදියුණු කිරීම මෙම ශක්තිමත් කාර්යසාධනයට ප්රධාන වශයෙන් හේතු…
ஓமந்தை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.
யாழ். ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுவாமிநாத ஐயா என்றழைக்கப்படும் சந்திரன் ஐயா என்பவரே நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் காரில் பயணித்த அவரின் மனைவி, மகன் மற்றும் மைத்துனர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரபாகரசர்மாவின் மகனான அக்ஷே கடந்த 1ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து பிரபாகரசர்மாவின் மைத்துனர் நேற்றையதினம்(ஜூன் 20) வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.
