தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரி அடையாளம்!
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் வைத்தியர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளாதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியர் உமர் முகமது, கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டைக்கு அருகே வெடித்த வெள்ளை ஹ_ண்டாய் ஐ 20 காரின் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் சுமார் ஒன்பது பேர் உயிரிழந்தனர். சந்தேக நபர், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன், செங்கோட்டைக்கு அருகில் அந்தக் காரை 3 மணி நேரம் நிறுத்தி…

