Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
INSEE Lanka, ‘Build Sri Lanka கண்காட்சி 2026’ இன் நிறுவன அனுசரணையாளராக இணைகிறது
இலங்கையின் ஒரே முழுமையான ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தியாளரும் சந்தைத் தலைவருமான INSEE Lanka, இலங்கை கட்டுமானத் தொழில்துறை சபையால் (Chamber of Construction Industry) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘Build Sri Lanka வீடமைப்பு மற்றும் கட்டுமானக் கண்காட்சி 2026’ இன் நிறுவன அனுசரணையாளராக (Corporate Sponsor) முக்கிய இடத்தைப் பெறுகிறது. தரம், நிலைத்தன்மை மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நாட்டின் கட்டுமானத் துறையை மேம்படுத்துவதில் INSEE இன் அர்ப்பணிப்பை இவ் இணைவு வெளிப்படுத்துகிறது.
இக் கண்காட்சி 2026, மே 22 முதல் 24 வரை BMICH இல் நடைபெறவுள்ளது. இதில் கட்டுமானத் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பங்குதாரர்களும் சர்வதேசப் பங்கேற்பாளர்களும் கலந்துகொள்வார்கள்.
இலங்கையின் கட்டுமானத் துறை புதிய சகாப்தத்தில் நுழையும் வேளையில், ஒன்றிணைவதற்கும், புதுமைகளைப் புகுத்துவதற்கும், ஒத்துழைப்பதற்கும் ஆன தேவை முன்னெப்போதையும் விட அதிகமாகியுள்ளது. இத்துறையின் மிகவும் செல்வாக்குமிக்க நிகழ்வுகளில் ஒன்றாக ‘Build Sri Lanka’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது, உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், கட்டிடக் கலைஞர்கள், பொறியியளாலர்கள், கட்டுமான மேம்பாட்டாளர்கள் (developers) மற்றும் வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட கட்டுமான மதிப்புச் சங்கிலியில் பங்கேற்கும் அனைவரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது.
கட்டுமானம் தொடர்பான தகவலறிந்த முடிவெடுப்பதை சாத்தியமாக்கும் வகையில், தொழில்துறை அறிவை பொதுமக்களின் புரிதலுடன் இணைப்பதில் Build Sri Lanka முக்கிய பங்கு வகிக்கிறது.
INSEE Lanka ஐப் பொறுத்தவரை, இக் கண்காட்சியானது அதன் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும், இலங்கையில் கட்டுமானத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான தளமாகவும் விளங்குகிறது. மேலும், இதில் பங்கேற்பது, இத்துறைக்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் சமூகங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நீடித்த மதிப்பை உருவாக்குவதற்குமான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.
இத்துறை வளர்ச்சியடையும்போது, நிலைத்தன்மை, செயல்திறன் மற்றும் புதுமை ஆகியவற்றில் தொழில்துறையின் வளர்ந்து வரும் கவனத்திற்கு ஆதரவளிக்க INSEE சிறந்த நிலையில் உள்ளது. Build Sri Lanka கண்காட்சி 2026 இல் நிறுவனத்தின் பங்கேற்பானது கட்டமைப்புகளை உருவாக்குவதில் அதன் நீண்டகால அர்ப்பணிப்பையும் உறுதிமிக்க, பொறுப்பான எதிர்காலத்தையும் வெளிப்படுத்தும்.
INSEE Lanka இன் பிரதம நிறைவேற்று அதிகாரி Eng. துசித் குணவர்ணசூரிய கூறுகையில், “2026 ஆம் ஆண்டுக்கான Build Sri Lanka கண்காட்சி 2026 இல் நிறுவன அனுசரணையாளராக இணைந்திருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். இது, கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமாகிய எங்களின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. இத்துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இது போன்ற தளங்கள் இன்றியமையாதவை. மேலும், நாட்டிற்காகப் புத்தாக்கம், தரம் மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் INSEE நிறுவனம் உறுதியாக உள்ளது.” என்றார்.
INSEE காட்சிக் கூடத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள், நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமங்களான INSEE சங்ஸ்தா மற்றும் Mahaweli Marine Plus சீமெந்து, மேம்பட்ட mortar வகைகள் மற்றும் ready-mix கொங்கிறீட் தீர்வுகள் உள்ளிட்ட முழுமையான தீர்வுகளை பார்வையிடலாம். மேலும், அனைத்து தொழில்துறை பங்குதாரர்களுக்கும் திறந்த ஒத்துழைப்பு தளமாக விளங்கும் ‘INSEE i2i – Innovations to Industry’ காட்சிப்படுத்தப்படும். INSEE i2i, புதுமையான மற்றும் நிலைத்தன்மை கொண்ட சீமெந்து மற்றும் கொங்கிறீட் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்க பங்குதாரர்களுக்கு உதவும். மேலும் இது, கூட்டுச் சூழலில் அறிவுப் பகிர்வு, கற்றல் மற்றும் தயாரிப்பு பரிசோதனைகளுக்கும் ஆதரவு வழங்குகிறது.
வருகையாளர்களுக்கு, INSEE அனுபவமானது, புதுமையான கட்டுமானத் தீர்வுகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவைப் பெறுவதற்கும், சிறந்த நடைமுறைகளைப் புரிந்துகொள்வதற்கும், நவீனப் பொருட்கள் எவ்வாறு செயல்திறனையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்தும் என்பதை ஆராய்வதற்கும் வாய்ப்பாக அமையும். மேம்பட்ட பொருட்களை நாடும் கட்டிடக் கலைஞராக இருந்தாலும், செயல்திறனை நாடும் ஒப்பந்தக்காரராக இருந்தாலும், அல்லது தங்களின் கனவு இல்லத்தை திட்டமிடும் வீட்டு உரிமையாளராக இருந்தாலும், நீண்டகால மதிப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான தரத்தை வழங்கும் தீர்வுகளை INSEE அளிக்கிறது.
இலங்கையில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக INSEE Lanka இன் இருப்பு ஆனது தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் பொறுப்பான வளர்ச்சியின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. வலிமை, நீடித்துழைக்கும் தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் புதிய அளவுகோல்களை அமைத்து, இலங்கையில் Portland Composite Cement (PCC) ஐ அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் இதுவாகும். INSEE இன் தயாரிப்புத் தொகுப்பானது, National Cleaner Production Centre (NCPC) Sri Lanka இன் EcoLabel சான்றிதழ் மற்றும் இலங்கையின் பசுமைக் கட்டிட சபையின் 5-நட்சத்திர பசுமை முத்திரை சான்றிதழ் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தயாரிப்பு அறிவிப்புகள் (EPDs) மற்றும் சான்றிதழ்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை புதிய சகாப்தத்தை நோக்கி முன்னேறும் நிலையில், துறைக்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல INSEE உறுதியாக செயல்பட்டு வருகிறது. கட்டமைப்புகளை உருவாக்குவதைக் கடந்து, சமூகங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நீடித்த மதிப்பை உருவாக்கும் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துவதே Build Sri Lanka கண்காட்சி 2026 இல் பங்கேற்பதன் முக்கிய நோக்கமாகும்.
Finally found a platform that actually feels fair. The game variety is impressive and everything loads quickly on my phone. Definitely sticking with eclottomatica from now on.
The app is super intuitive and easy to navigate. I love how I can access my favorite games on the go without any lag. Just download sagjiliapp if you want a seamless gaming session.
Really glad I found this workaround. It works perfectly and lets me get into the action whenever I want. Thanks for providing fakestakeunblocked for the community.