பெங்கொக்கின் மிகவும் பிரபலமான Soho Hospitality நிறுவனத்திற்குச் சொந்தமான Charcoal Tandoor Fire Grill உணவகம், இலங்கை மக்களுக்காகப் புதியதொரு அனுபவத்தை வழங்கும் நோக்குடன் கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள Capitol Twin Peaks இன் 50வது மாடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தனித்துவமான உணவகத்தின் நோக்கம், இலங்கையர்களுக்கு உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதாகும். இலங்கையின் முன்னணி இசை ஜாம்பவான்களான பாத்திய ஜயகொடி, சந்துஷ் வீரமன் மற்றும் மெவன் குணதிலக்க ஆகியோரின் கூட்டு…
குற்றச் செயல்களை மேற்கொள்ள பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட இருவர் கைது!
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேரா என்பவரின் தலைமையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளுவதற்கு பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு 10 பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீகொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 25 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 15 தோட்டாக்கள், 1,534,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Hey there, thinking about testing the waters at 88fcbet. Any insights on their platform and game selection?
Xosohoaphat, I’m not super impressed with this site but its not the worst, it does the job so if you are looking for a quick win, then give this a go! Here’s the link to the site: xosohoaphat