இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
கொட்டகலையில் ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை புனரமைப்பதற்கு அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (13) மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகில் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலையில் உள்ள லோகில் தோட்ட நுழைவாயிலுக்கு அருகில் குறித்த போராட்டம் நடைபெற்றது.
