2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை, இலங்கையில்: இந்திய தேசிய கட்டண வலையமைப்பின் (NPCI) சர்வதேச பிரிவான NIPL இன்டர்நேஷனல் (NIPL) நிறுவனம், இலங்கை முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் UPI கட்டண முறையை விரிவுபடுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம், இந்திய பயணிகள் இலங்கையில் எளிதாக பணம் செலுத்த வசதியேற்படுத்துவதோடு, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் நோக்கமாகும். இந்தியாவின்…
சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நுவரெலியா நகரத்திற்கு நுழையும் பல முக்கிய வீதிகளில் அடர்ந்த பனிமூட்ட நிலை காணப்படுவதால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையும், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து ஹக்கல வரையும், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பம்பரகலை வரையும் இந்த அடர்ந்த பனிமூட்ட நிலை நிலவுகிறது.
அவ்வப்போது ஏற்படும் அடர்ந்த பனிமூட்ட நிலை காரணமாக, இந்த வீதிகளில் வாகனங்களை இயக்கும்போது, வாகனங்களின் முன்பக்க பிரதான விளக்குகளைப் பயன்படுத்தி, மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு நுவரெலியா பொலிஸார் வாகன ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
