ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (13)மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 288 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 450 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 511 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 685 கஞ்சா செடிகளும், 001 குஷ் போதைப்பொருளும், 004 கிராம் ஹசீஸ்…
மாகாண சபைத் தேர்தல்களுக்கான பாராளுமன்ற விசேட குழு பிரேரணை சமர்ப்பிப்பு
மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காகவே புதிய குழு ஒன்றை நியமிக்கும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காணப்படும் குறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக பொது இணக்கப்பாட்டுக்கு வந்தால் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்தலாம் என்றார்.
2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (5) காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதற்கமைய இன்று காலை 9.30 மணி முதல் மு.ப 10மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 3.30 மணி வரை கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் 2371/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் 2428/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப. 3.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2025.12.28 ஆம் திகதி 2468/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம் தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், இந்தத் தீர்மானம் மீதான விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட காலம் போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது குழுவில் அறிவித்துள்ளனர்.
அத்துடன், பி.ப. 5.30 மணிக்கு ஒழுங்குப் புத்தக இல. 3 இல் திகதி குறிப்பிடப்படாததாக சேர்க்கப்பட்டுள்ள ‘மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ்
நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணையை அங்கீகரிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தல்களை மிக விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 3(ஆ) பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளின்படி, ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் எல்லை நிர்ணயக் குழுவினால் தேர்தல் தொகுதிகள் மற்றும் எல்லைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த முடியும்.
சட்ட விதிகளின் கீழ் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையாமையே மாகாண சபைத் தேர்தலை இதுவரை நடத்த முடியாமல் போனதற்கான காரணமாகவுள்ளது. எனவே, எல்லை நிர்ணயத்தைப் பூர்த்தி செய்து தேர்தலை நடத்துவதா? அல்லது 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து தேர்தலை நடத்துவதா? என்பது குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். எவ்வாறாயினும், இச்செயற்பாடுகளின் இறுதியில் தேர்தலை நடத்துவதற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாகவே புதிய குழு ஒன்றை நியமிக்கும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காணப்படும் குறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக பொது இணக்கப்பாட்டுக்கு வந்தால் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்தலாம் என்றார்.


W88Siver… Alright, I’m checking out W88Siver. Website looks clean, gotta give them that. Now, let’s see if the betting options are good and withdrawals is a breeze. If so, I’ll be sticking with w88siver !
Jljl55phlogin – time to get logged in and play! Hopefully the wins today are good ones. Keeping my fingers crossed for a good session!. jljl55phlogin