கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 816 பேர் கைது!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (13)மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, 288 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 450 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 511 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 685 கஞ்சா செடிகளும், 001 குஷ் போதைப்பொருளும், 004 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 101 போதை மாத்திரைகளும், 590 கிராம் 998 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 07 கிராம் 374 மில்லிகிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களில் 05 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

