SELVE is an innovative, spoken English app designed to make English communication more accessible through real-time AI-driven support. Developed by the Selvern Trust for people whose career advancement has slowed due to a lack of confidence in speaking English, SELVE functions as an interactive platform to resolve these language barriers. Available for download with a…
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
கடந்த 7ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த வரவு செலவு திட்டம் தொடர்பிலான விவாதம், தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று (14.11.2025) வாக்கெடுப்பு இடம்பெற்றது.
அதன்படி, 118 வாக்குகளுடன் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும், குறித்த வாக்கெடுப்பில் 42 உறுப்பினர்கள், வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
இதேவேளை, வாக்கெடுப்பிலிருந்து தமிழரசுக் கட்சி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

