வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்று (22) இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் கல்வான பகுதியில், இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (22) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இதன்போது, விபத்தில் காயமடைந்த பாதசாரி, முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முல்லேரியா பகுதியை சேர்ந்த 71 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் முல்லேரியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முல்லேரியா பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அனுராதபுரம் – பொதானேகம பகுதியில், அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், அனுராதபுரம் – பொதானேகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

One thought on “வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *