டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, நாட்டுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கடந்த 13 நாட்களில் மட்டும் இலங்கைக்கு 115,043 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி ஜனவரி 1 ஆம் திகதி முதல் 367,804 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் இதுவரையிலான காலப்பகுதியில் இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள், உணவாக பணியாளர்கள், வாகன சாரதிகள், சுற்றுலாப்பயணிகளை வழிநடத்துவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
