இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள கிளைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது
அநாகரிகமாக செயற்பட்ட யூடியூப்பர் உள்ளடங்கலாக நால்வருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்.

அண்மையில் யூடியூப்பர் ஒருத்தர் உதவி செய்வதாக கூறி அநாகரிகமாக நடந்துகொண்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து குறிப்பிட்ட யூடியூப்பர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் வெளியிட்ட காட்சி சர்ச்சைக்குள்ளானதை தொடர்ந்து அந்த குழு மீண்டும் அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையிலேயே அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.