நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
அனந்த் அம்பானியின் கனவுத்திட்டத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் நீண்ட நாள் கனவுத் திட்டமான வந்தாரா(Vantara) விலங்குகள் மறுவாழ்வு மையம் குஜராத்தின் ஜாம்நகரில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
அந்த அழகிய மையத்தை பிரதமர் மோடி இன்று(மார்ச் 4) திறந்து வைத்ததோடு ஒவ்வொரு விலங்குகளாக தனித்தனியே நேரம் செலவு செய்து உணவூட்டி மகிழ்ந்தார் பிரதமர் மோடி.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகைதந்த பிரபலங்கள் இந்த வந்தாராவை பார்வையிட்டு வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.













