நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் உதவி இடைநிறுத்தலும், ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியும்.
உக்ரைன் அதிபருடனான காரசாரமான கலந்துரையாடலை அடுத்து அமேரிக்கா உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை இடைநிறுத்தும் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள ரஸ்யா தனது நாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடைகளை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவு உண்மை என்றால் இது உக்ரைன் அரசாங்கத்தை சமாதான முயற்சிகளை நோக்கி உண்மையாகவே திருப்பிவிடும் என கிரெம்ளின் பேச்சாளர் திமிட்ரிவ் பெஸ்கோ தெரிவித்துள்ளார். இருப்பினும் சிலவேளைக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திக்கொண்டால் உக்ரைனிற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் முனையக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மிக முக்கியமான அளவில் கூடிய ஆயுதங்கள் அமெரிக்காவிடமிருந்தே உக்ரைனுக்கு கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

