டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அமெரிக்காவின் நடத்தை ஈரானை தூண்டும்விதமாக உள்ளது. எச்சரிக்கின்றார் ஈரானின் ஆன்மீக தலைவர்

அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டால் ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் என ஈரானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஆயத்தொல்லா அலி கமேனியின் ஆலோசகருமான அலி லரிஜானி இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது நடத்தையை மாற்றவேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
சாகோஸ் தீவின் டியாகோகார்சியா தளத்தில் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரான் மீது குண்டுவீசினால் அல்லது இஸ்ரேலை குண்டுவீச தூண்டினால் அவை ஈரான் வேறு விதமான முடிவை எடுக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தும் என அலி லரிஜானி தெரிவித்துள்ளார்.
ஈரான் எடுக்கும் முடிவு அமெரிக்காவின் நலன்களிற்கு ஏற்றதாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுவிவகாரம் தொடர்பில் அமெரிக்கா தவறிழைத்தால், ஈரான் தன்னை பாதுகாப்பதற்காக அணுவாயுதங்களை நோக்கி நகரவேண்டிய நிலையேற்படும் என ஈரானின் ஆன்மீக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ஈரானிற்கும் அதன் ஆதரவு சக்திகளிற்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்கா டியாகோ கார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு அதிநவீன போர் விமானங்களை அனுப்பியுள்ளது.
அணுவாயுதங்களை உருவாக்குவதை தடை செய்து கமேனி பிறப்பித்த மத ஆணையை ஈரான் பின்பற்றுகின்றது என தெரிவித்துள்ள லரிஜானி ஆன்மீக தலைவரின் பட்வா நாங்கள் அணுவாயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்கின்றது, பட்வா என்பது அரசியல் உத்தரவுகளில் இருந்துவேறுபட்டது, அவரின் இந்த கடிதத்தை ஏற்கனவே ஐநாவிற்கு அனுப்பியுள்ளோம் அதேநேரம் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்ந்தும் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் உள்ளது இருப்பினும் அமெரிக்காவின் இராணுவநடவடிக்கை இதனை மாற்றலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.