டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அமெரிக்காவில் மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றம்..

அமெரிக்காவில் கூட்டாட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்
இதன்மூலம் அமெரிக்காவில் மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டுள்ளது.
50 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அந்நாட்டு கல்வித்துறை கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியில் தான் அறிவித்ததைப் போலவே கல்வித்துறையை கலைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த உத்தரவால் தனியார் பள்ளிகள் பய ன் பெறக்கூடும் என கூறப்படுகிறது.