டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அமெரிக்காவில் மேலும் பல அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது ஆலோசகர்ரும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கும் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள், அமெரிக்காவில் கிட்டத்தட்ட பத்தாயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.
உள்துறை, எரிசக்தி, வேளாண்மை மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைகளில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அமெரிக்காவில் அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இது எலோன் மஸ்க்கின் ஆலோசனையாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் ஊகிக்கின்றார்கள். காரணம் கடந்தகாலத்தில் எலோன் தளத்தை வாங்கிய போதும் இவ்வாறான ஆட்குறைப்புகள் வேகமாக நடைபெற்றது அதனை முன்னிறுத்தியே இப்படியான கருத்துகள் பகிரப்படுகின்றது.