உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
அவுஸ்திரேலியாவிற்கு புயல் எச்சரிக்கை விடடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆல்ஃபிரட் என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி, பலத்த மழையையும், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றையும் கொண்டு வரக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் விளைவாக பிரிஸ்பேன் முழுவதும் 20,000 சொத்துக்கள் பாதிக்கப்படலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.