டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய மந்திரிசபை கூட்டம் அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்திய படைகளின் ஏவுகணை தாக்குதல் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பின்னர், பாதுகாப்புக்கான மந்திரிசபை குழு கூட்டமும் நடந்தது.மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு முன்பாக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள கமிட்டி அறையில் இக்கூட்டம் நடப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.