Ash Wednesday – திருநீற்றுப் புதன் என்றால் சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிறது.
திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது. “மனிதா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள்.இந்த சடங்கின் மூலம் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரமபமாகின்றது.
இந்த தவக்காலத்தில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சுத்த போசனமும், 18 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருப்பது நன்மை.
இயேசு பாலைவனத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்தது முதல் அவர் கல்வாரி மலையில், சிலுவையில் உயிர் துறந்தது வரையான அவரது திருப்பாடுகளை நினைவுகூர்ந்து இன்றிலிருந்து எமது வாழ்வில் ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
இறை இயேசுவுக்குகந்த மக்களாக வாழ வரம் வேண்டி இந்நாட்களில் பிராத்திப்போம். நாம் அனைவரும் என்றேனும் ஒருநாள் மண்ணுக்குத் திரும்புவோம். அதற்கு நம் நெற்றியில் பூசப்படும் சாம்பல் தான் அடையாளம். நாம் மண்ணுக்குள் போவதற்குள் மனம் திருந்தி, நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு, தீய எண்ணங்களை தவிர்த்து, அன்பு, கருணை, இரக்கம் ஆகிய குணங்களை உள்வாங்கி, எங்களுடைய மண்ணுலக வாழ்வை செம்மைப்படுத்த இந்த தவக்காலத்தைப் பயன்படுத்துவோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட…
அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்தை ரஷ்யா நிராகரித்துள்ளதுடன், இது உக்ரைனுக்கு மாத்திரமே தற்காலிக ஓய்வு அளிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி…
ஹட்டன், கொட்டகலை நகரில் அமைந்துள்ள கோவில் ஒன்றின் திருவிழாவிற்குக் கொண்டு வரப்பட்ட யானை, இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது. கோவில்…
இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை…
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.…
இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? - முன்கூட்டியே கண்டறிதல்,…