நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கனடாவில் சுற்றுப்பயணம்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி கமீலாவுடன் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் கனடா சென்ற அவருக்கு, தலைநகர் ஒட்டாவாவில் அந்த நாட்டின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு கனடா நாட்டின் புகழ்பெற்ற ஐஸ் ஹாக்கி வீரர் கிறிஸ் பிலிப்ஸை மன்னர் சார்லஸ் சந்தித்தார். தொடர்ந்து லேண்ட்ஸ் டவுன் பூங்காவில் உள்ளூர் வியாபாரிகளை மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் கனடா ஆளுனர் ஜெனரலின் அதிகாரப்பூர்வ இல்லமான ரிடியூ ஹாலில் இருவரும் மரக்கன்று நட்டனர்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது மன்னர் சார்லஸ் கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது கனடா மீதான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தப்படவுள்ளது

