இசையமைப்பாளர் தமனுக்கு கிடைத்த “போர்ஷே”.

பிரபல தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘Akhanda, Veera Simha Reddy, Bhagavanth Kesari, Daaku Maharaaj’ போன்ற திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக பின்னணி இசையை அட்டகாசமாக தந்தவர் இசையமைப்பாளர் தமன்.குறிப்பாக ‘Akhanda’ படத்தின் BGM பாலய்யா ரசிகர்களின் ரிங் டோனாகவே மாறும் அளவிற்கு வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ‘Akhanda 2: Thandavam’ தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இந்த திரைப்படத்துக்கு தமன்னே இசையமைக்கின்றார்.

இந்நிலையில் திடீரென பாலய்யா, இசையமைப்பாளர் தமனுக்கு ‘போர்ஷே’ சொகுசுக் காரைப் பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்து பாலய்யா, “இரண்டு ஜெனரேஷன் இசையமைப்பாளர்களைப் பார்த்து வருகிறேன். என் தம்பி தமன் ஒரு நல்ல இசையமைப்பாளர். இது தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் அன்புப் பரிசு” என்று மனமகிழ்ச்சியோடு பேசி இருக்கின்றார்.

அதேநேரம் தமனும் நடிகர் பாலய்யா குறித்து பலதடவைகள் மேடைகளில் நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *