இலங்கை ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய அத்தியாயம், கடந்த 2025 ஜூன் 21 ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது. Home Lands Group நிறுவனத்தின் முக்கியமான அபிவிருத்தித் திட்டமான Pentara Residencies, இதன்போது கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது, இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான தனி முதலீட்டு திட்டம் எனும் பெருமையை பெற்றுள்ளது. “Signature Night: Beyond the Skyline” எனப் பெயரிடப்பட்ட…
இந்தியாவின் கொட்டி தீர்த்த அடைமழை : இருபத்திற்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் வீடுகள் புதைந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ வெள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவின் எல்லையை ஒட்டிய அண்டை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மாநிலத்தில் நடந்த ஒரு தனி சம்பவத்தில் மேலும் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அதேநேரம் மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக எட்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு இன்னும் பிற இடங்களில் சீரற்ற வானிலை காரணமாக மொத்தமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை நிறுவனம் வரும் நாட்களில் இப்பகுதியில் அதிக கனமழை பெய்யும் என்று முன்னெச்சரிக்கை செய்துள்ளமையும்ன குறிப்பிடத்தக்கது.