இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய C-130 விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதைச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் C-130 விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதைச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திடம் ஆலோசகர் (வளர்ச்சி ஒத்துழைப்பு) மைத்ரே குல்கர்னி, உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் மந்தீப் சிங் நேகி மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் குழுவால் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம் இன்று (29) முற்பகலில் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *