இனி வெறும் நயன்தாராதான்…!

இவ்வளவு காலமும் தன்னை ரசிகர்களும், ஊடகங்களும் Lady Superstar என பட்டமளித்து பாராட்டி அழைத்து வந்தமைக்கு நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா,. இனிவருகின்ற காலங்களில் தன்னை வெறுமனே நயன்தாரா என மாத்திரம் அழைக்குமாறு நேற்று (மார்ச் 4) உத்தியோகபூர்வ அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு அண்மைக்காலமாக இவ்வாறு பல சினிமா பிரபலங்கள் தங்கள் பெயரின் முன்னாள் இருந்த பட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

“தல” அஜித் – அஜித் குமார் அல்லது AK என தன்னை அழைக்கும் படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, அதனை Good Bad Ugly திரைப்படத்திலும் ஆழமாக அப்பதிவுசெய்திருப்பர்(இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர்). தொடர்ந்து “ஜெயம்” ரவி – ரவி மோகன் என அழைக்கும்படி அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்போது நயன்தாரா தன்னுடைய பட்டத்தை தவிர்க்கும்படி தெரிவித்திருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *