டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
இரவுநேரங்களில் உக்ரேனை தாக்கும் ரஷ்யா
உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில் ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதோடு முப்பதிற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இதனை உக்ரைனின் அவசர சேவைகள் துறை உறுதி செய்து தெரிவித்துள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலில் எட்டு 5 மாடிகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும் ஒரு நிர்வாக கட்டிடமும் 30 கார்களும் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளபக்கத்தில் “எங்களைப் போலவே அமைதியை விரும்பும் கூட்டாளிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம், அடுத்த வாரம் ஐரோப்பா, அமெரிக்கா, சவுதி அரேபியாவில் நிறைய வேலைகள் இருக்கும். அமைதியை விரிவுபடுத்துவும் பாதுகாப்புக்கான அடித்தளத்தை வலுப்படுத்தவும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்று ட்ரம்ப் குழுவினருடன் பல்வேறு மட்டங்களில் தீவிரமான பணிகளில் ஈடுப்பட்டோம். நோக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது, விரைவில் அமைதி மற்றும் நம்பகமான பாதுகாப்பே அது. ஒரு ஆக்கபூர்மான அணுகுமுறைக்கு உக்ரைன் உறுதிபூண்டுள்ளது. உதவி செய்து வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.