Categories: Business

இலங்கையில் 20 ஆண்டுகளாக இணைந்துசெயற்படும் Samudhi மற்றும் AMARON

வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சந்தை மாற்றத்தின் இருபது ஆண்டுகள் கூட்டாண்மையை கொண்டாடுகிறது

கொழும்பு, ஜூன் 20, 2025 – AMARON வாகன பற்றரிகளின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Samudhi Trading Company (Pvt) Ltd, இந்தியாவின் முன்னணி பற்றறி உற்பத்தியாளர்களில் ஒருவரான அமர ராஜா பற்றறிகள் மற்றும் மொபிலிட்டி லிமிடெட் உடனான தனது கூட்டாண்மையின் 20 வருட கால ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லை இன்று கொண்டாடியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், Samudhi Trading Company மற்றும் Amara Raja பற்றரிகள் மற்றும் Mobility Limited ஆகிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

2005 இல் இலங்கை சந்தையில் AMARON அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, Samudhi நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு புதிய தயாரிப்பாக இருந்து, நாட்டின் வாகன பற்றரி துறையில் மிகவும் நம்பப்படும் வர்த்தக நாமமாக AMARON மாற்றப்பட்டது. பராமரிப்பு தேவையில்லாத தொழில்நுட்பம், உயர்தர செயல்திறன் மற்றும் நீடித்த நம்பகத்தன்மை ஆகியவற்றுக்காக பாராட்டப்பட்ட AMARON, இலங்கையின் வாகன உரிமையாளர்களிடையே ஒரு பொதுப்பெயராக மாறியுள்ளது.

50 விற்பனையாளர்கள் மற்றும் மாதம் 1,000 பற்றரிகள் விற்பனை என்ற சிறிய விநியோக வலைப்பின்னலுடன் ஆரம்பித்தது, இன்று 600க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் மாதத்திற்கு 18,000க்கும் அதிகமான பற்றரிகள் விற்பனை என்ற தேசிய வலையமைப்பாக வளர்ந்துள்ளது. இலங்கையில் 5 வருட உத்தரவாதம் அறிமுகப்படுத்திய முதல் பற்றரி வர்த்தக நாமமாக AMARON திகழ்கிறது, இது தயாரிப்பு உத்தரவாதம் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றில் புதிய தரத்தை நிர்ணயித்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த Samudhi Trading Companyஇன் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் காமினி ரத்னாயக்க, “வலுவான விநியோக வழிமுறையை உருவாக்கியபோதே, கடந்த இருபது ஆண்டுகளாக இலங்கை முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பும் செயல்திறனும் வழங்கும் ஒரு வர்த்தக நாம மரபை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அமர ராஜாவுடனான எங்கள் கூட்டுப்பணி, பகிரப்பட்ட மதிப்புகள், நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் மாறிவரும் இயக்கத் தேவைகளுக்கு ஏற்ப ஆற்றல் தீர்வுகளை மறுவரையறை செய்யும் ஒரு பார்வையில் வேரூன்றியுள்ளது. நிலைப்பாடு, வாடிக்கையாளர் மையம் மற்றும் ஆழமான சந்தை புரிதல் மூலம், AMARON ஐ இலங்கையின் மிக நம்பகமான பற்றரி வர்த்தக நாமங்களில் ஒன்றாக வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். எங்கள் தயாரிப்புகளை விரிவுபடுத்துதல், சேவை தரங்களை உயர்த்துதல் மற்றும் இலங்கையின் வாகன ஆற்றல் தீர்வுகளுக்கான தரத்தை நிர்ணயிப்பதன் மூலம், வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை வழிநடத்த எதிர்நோக்குகிறோம்.” என தெரிவித்தார்.

இலங்கையில் AMARON-இன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான மூலோபாய பாதையில் இலங்கையின் வாகன பற்றரி துறையில் முன்னணி நிறுவனமாகத் தன்னை நிலைநாட்டவும், சந்தைப் பங்கை 40% ஆக அதிகரிக்கவும் Samudhi ஒரு மூலோபாய வரைபடத்தை வகுத்துள்ளது. இந்த அதிக தேவை கொண்ட பிரிவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, Samudhi ஒரு புதிய 35Ah பற்றரியை ஒரு வருட உத்தரவாதத்துடன் அறிமுகப்படுத்த உள்ளது. இது போட்டி விலை மூலம் முச்சக்கர வாகன உரிமையாளர்களுக்கு சிறந்த தீர்வாக அமையும்.

AMARON ஆனது வளர்ந்து வரும் ஹைப்ரிட் வாகன சந்தையைப் பூர்த்தி செய்யும் வகையில் அதன் தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்துகிறது. இதற்காக, ஹைப்ரிட் வாகனங்களுக்கான சிறப்பு துணை பற்றரியை (auxiliary battery) அறிமுகப்படுத்துகிறது. வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் AMARON நிறுவனம் AMARON வாடிக்கையாளர் சேவை மொபைல் Appஐ அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் App, காகிதமில்லா உத்தரவாத நிர்வாகம் (paperless warranty management), வேகமான சாலைப் பக்க உதவி (faster roadside assistance) மற்றும் உள்ளுணர்வுடன் கூடிய பயனர் இடைமுகம் (intuitive user interface) போன்ற வசதிகளை வழங்கும். இது விற்பனைக்குப் பிந்தைய சேவையிலும் வாடிக்கையாளர் வசதியிலும் AMARON கொண்டுள்ள ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்தும்.

Amara Raja Energy & Mobility (ARE&M) நிறுவனத்தின் நிறைவேவற்று அதிகாரமுடைய பணிப்பாளர் திரு. Harshavardhana Gourineni கருத்து தெரிவிக்கையில், “இலங்கை எங்கள் சர்வதேச வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய சந்தையாக உள்ளது, இந்த சாத்தியத்தை வெளிக்கொணர்வதில் Samudhi முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக, எங்கள் கூட்டுப்பணி வலுவான சந்தை செயல்திறனை மட்டுமல்லாமல், புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்-முதல் சேவை குறித்த ஒரு பொதுவான தூரநோக்குப் பார்வையையும் வழங்கியுள்ளது. இந்த அடுத்த கட்டத்தில், AMARON-ஐ சந்தைத் தலைமை நிலைக்கு உயர்த்துவதற்கும், இப்பிராந்தியத்தில் தரம் மற்றும் நம்பிக்கைக்கான புதிய தரநிலைகளை நிர்ணயிப்பதற்கும் Samudhiஐ ஆதரிப்பதில் நாங்கள் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

Samudhi Trading Company தொடர்பாக

2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Samudhi Trading Company (Pvt) Limited, இலங்கையின் ஒரு முன்னணி வாகன தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் அமர ராஜா நிறுவனத்தின் AMARON மற்றும் POWERZONE பற்றரி வர்த்தக நாமங்களின் பிரத்தியேக இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆகும். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்துடன், இந்நிறுவனம் பயணிகள் வாகனங்கள், இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், வணிக வாகனங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் வீட்டு UPS/இன்வெர்ட்டர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான பற்றரிகளின் விரிவான தயாரிப்புப் பட்டியலை வழங்குகிறது. Samudhi Trading நிறுவனம் நாடு முழுவதும் 600 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களைக் கொண்ட ஒரு வலுவான வலைப்பின்னல் மூலம் செயல்படுகிறது. மேலும், நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்குகிறது. Samudhi குழுமத்தின் ஒரு உறுப்பினராக, இந்நிறுவனம் தரம், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக ஒரு வலுவான நற்பெயரைப் பெற்றுள்ளது.

Amara Raja Batteries and Mobility Limited தொடர்பாக

Amara Raja Energy & Mobility லிமிடெட் (ARE&M) ஆனது பல்வேறு வகையான தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளை உள்ளடக்கியது. இதில் ஆற்றல் சேமிப்பு தீர்வுகள், லித்தியம்-அயன் செல் உற்பத்தி (Lithium-ion cell manufacturing), பல்வேறு வகையான EV சார்ஜர்கள், லித்தியம்-அயன் battery pack assembly, ஆட்டோமொபைல் மற்றும் தொழில்துறை மசகு எண்ணெய்கள், மற்றும் புதிய இரசாயனங்களின் ஆய்வு ஆகியவை அடங்கும்.ARE&M இந்தியாவில் தொழில்துறை மற்றும் ஆட்டோமொபைல் பயன்பாடுகளுக்கான Energy சேமிப்பு தயாரிப்புகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.அமர ராஜா முக்கிய டெலிகொம் சேவை வழங்குநர்கள், டெலிகொம் உபகரண உற்பத்தியாளர்கள், UPS துறை, இந்திய ரயில்வே, மற்றும் மின்சாரம், எண்ணெய் & எரிவாயு தொழில் பிரிவுகளுக்குமான விருப்பமான விநியோகஸ்தர் ஆகும். அமர ராஜாவின் தொழில்துறை பற்றரி நாமங்களில் PowerStack®, AmaronVolt® மற்றும் Quanta® ஆகியவை அடங்கும்.இந்நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் பற்றரி நாமங்களான AMARON® மற்றும் PowerZone ஆகியவற்றையும் உற்பத்தி செய்கிறது. இவை இந்தியா முழுவதும் பரந்து விரிந்த விற்பனை மற்றும் சேவை வாடிக்கையாளர் நெட்வொர்க் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.Ashok Leyland, Ford India, Honda, Hyundai, Mahindra & Mahindra, Maruti Suzuki மற்றும் TATA Motors போன்ற நிறுவனங்களுக்கு OE உறவுகளின் கீழ் ஆட்டோமொபைல் பற்றரிகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.அமர ராஜாவின் தொழில்துறை மற்றும் ஆட்டோமொபைல் பற்றரிகள் (Industrial and Automotive Batteries) உலகம் முழுவதும் 50 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

7 News Pulse

Recent Posts

மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நுவரெலியாவில் 80வது கிளையை நிறுவி சாதனை படைத்து இலங்கை எங்கிலும் விஸ்தரிப்படைந்து வருகின்றது

இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ்…

5 days ago

The ‘Samaposha Provincial School Games 2025’ launches on 11 August for 9th consecutive year with 25,000 athletes from 7 provinces participating

With empowerment and patronage from Samaposha, the country's most popular breakfast cereal, the 'Samaposha Provincial…

5 days ago

FACETS Sri Lanka 2026: Cinnamon Life இல் புதிய யுகத்தின் தொடக்கம்

இலங்கையின் மிகப் பிரபலமான இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான FACETS Sri Lanka 2026, மாற்றத்தின் அடையாளத்துடன் அதன் 32ஆவது…

5 days ago

Sri Lanka’s first ever National AI Expo & Conference to drive transformation towards an AI-powered future

Ministry of Digital Economy and SLT-MOBITEL pioneer national initiative   Sri Lanka pioneers a new…

5 days ago

2025 ஆண்டு விற்பனை மாநாட்டில் சிறப்பையும் வளர்ச்சியையும் கொண்டாடிய Agromax Industries

இலங்கையின் முன்னணி நீர்ப்பம்பி உற்பத்தியாளரும், புத்தாக்கமான நீர் முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகவும் விளங்கும் Agromax நிறுவனம், 2025 ஆம்…

7 days ago

Fonterra Brands Lanka Pioneers Sri Lanka’s first National Competency Standard for machine operators in the Dairy industry

Fonterra Brands Lanka, in collaboration with the Tertiary and Vocational Education Commission (TVEC), the National…

7 days ago