டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது.
“தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன.
இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான தாக்குதலுக்கு எதிரான தீர்மானமான பதிலடி நடவடிக்கையின் தொடக்கமாகும்,” என IRNA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது