நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய டிரம்ப்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
உக்ரைனின் கனிம வளங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடவும், ரஷ்யாவுடனான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடவும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், அந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடந்துள்ளது.
இதன்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அதிக ஆதரவை வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ள நிலையில் ,உக்ரைன் தொடர்பில் அமெரிக்கா பாரிய பொறுப்பை ஏற்பது ஏற்புடையதல்ல என அமெரிக்க ஜனாதிபதி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது உடனடியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் அதிபரிடம் டிரம்ப் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன