உரமானிய விலை தொடர்பில் வெளியான தீர்மானம்

உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். 

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறைப்படியான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கே.டி. லால்காந்த, நெல் பயிர்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக அவதானம் செலுத்தி, நெல் விவசாயியைப் பாதுகாப்பதற்குத் திட்டவட்டமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 

One thought on “உரமானிய விலை தொடர்பில் வெளியான தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *