டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
ஊடகங்களில் வெளிவந்த தவறான தகவல் – மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தான் முன்வைத்த தவறான தகவலுக்கு மன்னிப்பை கோரியுள்ளார்.
வடமத்திய மாகாண சபைக்குச் சொந்தமான BMW கார் 5 மில்லியன் ரூபாகளுக்கும் குறைவாக விற்கப்பட்டதாக தயாசிறி கூறியமை தொடர்பிலேயே, அவர் மன்னிப்பை கோரியுள்ளார்.
செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட தவறான செய்திகளால் தான் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக, பதிவைத் திருத்துவதற்கு தான் முனைவதாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
குறித்த BMW கார் 21.8 மில்லியன் ரூபாகளுக்கு விற்கப்பட்டதாக, வட மத்திய மாகாண சபை உறுதிப்படுத்திய நிலையிலேயே, அவரின் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த வாகன ஏல செயல்முறையில் 124 மில்லியன் ரூபாய்கள் ஈட்டியதாகவும், அது வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டதாகவும் மாகாண சபை கூறியுள்ளது.