நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சுகவீனமின்மையால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது – “இன்று காலையில் நீரிழப்பு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று அதிக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்திய ஊடகங்களும், சமூகவலைத்தள வாசிகளும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக கதையை சித்தரித்து ARR -இன் இரசிகர்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கிவிட்டனர்.

