Nations Trust Bank PLC is pleased to announce the return of the Nations Trust Bank Golf Championship, which will take place on May 24th, 2025, at the Royal Colombo Golf Club (RCGC). The annual tournament has become a much-anticipated tradition for the Bank’s valued customers and partners, offering an active and engaging environment to connect…
ஒரே பார்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

கடந்த பொதுத் தேர்தலில் பிரயோகிக்கப்பட்ட வாக்குகளுடன், நேற்று நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குகளை ஒப்பிடும் போது, கட்சிகளுக்கு இடையில் பகிரப்பட்ட வாக்குகளில் பாரிய வித்தியாசங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மொத்த செல்லுபடியான வாக்குகளில் 6,863,186 வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றது. இது 61.56 சதவீதமாகும்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 4,503,930 வாக்குகளையே பெற்றுள்ளது.
இது 43.26 சதவீதமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி கடந்த பொதுத் தேர்தலில் 1,968,716 வாக்குகளை 17.66 என்ற சதவீதத்தில் பெற்றிருந்தது.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளை 21.69 சதவீதம் என்ற அடிப்படையில் பெற்றுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் செல்லுபடியான வாக்குகளில் 67.22 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றிருந்த போதும், தற்போது அங்கு 50.12 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் 19.9 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கு 22.86 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
பதுளை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 58.59 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 42.36 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 21.92 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 24.27 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 33.78 சதவீத வாக்குகளை இலங்கைத் தமிழரசு கட்சி பெற்றிருந்த நிலையில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 32.25 சதவீத வாக்குகளைப் பெற்று சிறிய சரிவை சந்தித்துள்ளது.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 18.62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி கடந்த பொதுத் தேர்தலில் 19.33 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் 13.98 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 11.32 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 68.63 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த போதும், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டம் முழுவதும் 47.80 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
கொழும்பில் இம்முறை 19.61 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கடந்த பொதுத்தேர்தலில் 18.12 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 40.42 சதவீத வாக்குகளைத் தேசிய மக்கள் சக்தியும், 12.34 சதவீத வாக்குகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், 9.34 சதவீத வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பெற்றிருந்தன.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறையில் தேசிய மக்கள் சக்தி 29.24 சதவீத வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 13.22 சதவீத வாக்குகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12.46 சதவீத வாக்குகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 10.32 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.
காலி மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 68.07 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கு 48.85 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காலியில் மொத்தமாக 23.01 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, கடந்த பொதுத் தேர்தலில் 15.6 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது.
ம்பஹா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 54.48 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றிருந்த போதும், இந்த கட்சி கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 72.76 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹாவில் 12.18 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 20.44 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 66.38 சதவீத வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, அங்கு இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 48.55 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 20.18 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள போதும், கடந்த பொதுத் தேர்தலில் 14.79 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது.
கடந்த பொதுத் தேர்தலில் 7.4 சதவீத வாக்குகளை ஹம்பாந்தோட்டையில் பெற்றிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கு 17.14 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 24.85 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த போதும், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 20.45சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசு கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 19.47 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 31.95 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் 8.6 சதவீத வாக்குகளையும், இம்முறை 18.44 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
அதேநேரம் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கடந்த பொதுத் தேர்தலில் 6.92 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 12.88 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 66.09 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 41.56 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி அங்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 23.42 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் 18.84 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது.
கேகாலை மாவட்டத்தில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 64.8 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கு 44.99 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, கேகாலை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 22.75 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது 25.54 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
குருணாகல் மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 69.56 சதவீத வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, இம்முறை அங்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 47.88 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கடந்த பொதுத் தேர்தலில் 20.22 சதவீத வாக்குகளையும் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25.98 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கடந்த பொதுத் தேர்தலில் 64.6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
எனினும் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டியில் மொத்தமாக 44.58 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தி கடந்த பொதுத் தேர்தலில் 18.83 சதவீத வாக்குகளையும், தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 20.04 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற மொத்த வாக்கு 66.16 சதவீதம் ஆகும்.
எனினும் இம்முறை அங்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 43.61 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
மாத்தளையில் கடந்த பொதுத் தேர்தலில் 19.37 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 24.08 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கடந்த பொதுத் தேர்தலில் 69.83 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 48.87 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 22.48 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள போதும் கடந்த பொதுத் தேர்தலில் 16.34 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது.
மொனராகலை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற மொத்த வாக்கு 64.27 சதவீதம் ஆகும். எனினும் இம்முறை அங்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 45.56 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
மொனராகலையில் கடந்த பொதுத் தேர்தலில் 22.81 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 27.28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கடந்த பொதுத் தேர்தலில் 41.57 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 35.59 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 26.97 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் 26.21 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது.
இம்முறை நுவரெலியாவில் தனித்து போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 14.74 சதவீத வாக்குகளைப் பெற்றது.
பொலன்னறுவை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 68.67 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கு 53.84 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி அங்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 18.92 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் 23.83 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது.
புத்தளம் மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 63.1 சதவீத வாக்குகளைப் பெற்று, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அந்த மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 42.31 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
அங்கு ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 23.65 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன், கடந்த பொதுத் தேர்தலில் 17.3 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் சதவீதம் 61.75 ஆகும்.
எனினும் இம்முறை அங்கு உள்ளூராட்சி மன்றங்களின் மொத்தமாக 42.12 சதவீத வாக்குகளையே தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றங்களில் 24.89 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் அந்த கட்சி அங்கு 22.31சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
திருகோணமலை மாவட்டத்தில் 42.48 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கடந்த பொதுத் தேர்தலில் பெற்றிருந்தது.
எனினும் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அந்த கட்சி திருகோணமலையில் மொத்தமாக 24.34 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி அங்கு கடந்த பொதுத் தேர்தலில் 25.9 சதவீத வாக்குகளையும், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15.89 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
இதேவேளை கடந்த பொதுத் தேர்தலில் 16.68 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 14.53 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 36.63 சதவீத வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுகட்சி, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கு 37.83 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் 16.69 சதவீத வாக்குகளையும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 17.96 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 25.88 சதவீத வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள்சக்தி , இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கு 22.24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி வவுனியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் 7.29 சதவீத வாக்குகளையும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 16.55 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 25.25 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த போதும், இம்முறை அங்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 20.78 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் மன்னாரில் 14.61 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கு 14.72 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
பொதுத் தேர்தலில் மன்னாரில் 13.37 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, இம்முறை 21.09 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
மன்னாரில் இலங்கைத் தமிழரசு கட்சி பொதுத் தேர்தலில் 12.6 சதவீத வாக்குகளையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 16.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.