உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
ஒஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநரை விடுவித்த இஸ்ரேல்

‘நோ அதர் லேண்ட்'(No other land) என்ற பாலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் “ஹம்தான் பல்லாலை” இஸ்ரேல் இராணுவம் விடுவித்துள்ளது.
இவர் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் (west bank) வைத்து இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இதன்போதே இஸ்ரேலிய வீரர்கள் அவர் அழைத்துசெய்யப்பட்ட வாகனத்தை தாக்கி, ஹம்தான் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது இஸ்ரேலிய இராணுவம்.
இஸ்ரேல் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டதனால் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை இஸ்ரேல் இராணுவம் வெளியிடுள்ளது,
இவ்வறிக்கையில்
“நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது.
பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹம்தான் பல்லால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் மேற்கு கரையில் உள்ள கிர்யாத் அர்பா பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.