நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடலில் மூழ்கி உயிரிழந்த வெளிநாட்டுப் பெண்
பெந்தோட்டை,பொல்கொட பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
நேற்று (23) பிற்பகல் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் அந்த பெண்ணை அருகிலுள்ளவர்கள் மீட்டு பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர் 25 வயதுடைய ஜோர்தான் நாட்டு பெண் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

