கதிர்காம பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது இரண்டு வான் கதவுகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரவீந்திர குமார தெரிவித்தார்.

நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக மாணிக்க கங்கையின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதால், கதிர்காமத்திற்கு வரும் பக்தர்கள் அவதானத்துடன் இருக்குமாறு மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *