அண்மையில் நடைபெற்ற SLIM தேசிய விற்பனை விருதுகள் 2024 இல், HNB மதிப்புமிக்க ஏழு விருதுகளைப் பெற்று, வங்கித் துறையில் தனது சிறந்து விளங்கும் திறனை மீண்டும் நிரூபித்தது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஆண்டுதோறும் நடத்தும் தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில், இலங்கையின் அனைத்து வணிகத் துறைகளிலும் உள்ள விற்பனை நிபுணர்களின் வெற்றியை அங்கீகரிக்கும் முக்கியமான விருது வழங்கும் நிகழ்வாகும். தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில் (NSA) HNB பெற்ற இந்த சிறந்த…
கனடாவின் 24ஆவது பிரதமர் பதவியேற்றார்.

கனடாவின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று (மார்ச் 14) பதவியேற்றார்.
தனது பதவியை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றார். கனடாவில் லிபரல் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவை தொடர்ந்து கார்னி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று (மார்ச் 14) பதவி ஏற்கும் முன்பு மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் இன்று நாம் காலத்தின் தேவைக்கு ஏற்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என கனடியர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை இந்த குழு வழங்கும், சிறிய, அனுபவம் வாய்ந்த அமைச்சரவை வேகமாக செயல்பட்டு, நமது பொருளாதாரத்தையும் கனடாவின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.