Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
களனி துருது பெரஹராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து
களனி ரஜ மஹா விஹாரையால் நடத்தப்படும் வருடாந்த துருது மஹா விழாவுடன் இணைந்து நடத்தப்படும் ஹெலேனா பாலிகா வித்தியாலய பெரஹெரா காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பெரஹெராவானது, இன்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் 03.00 மணிக்கு ஹெலேனா ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் ஆரம்பமாகி, கல்பொரளை, வலன்கட சந்திக்கு அருகிலுள்ள விஹார மாவத்தைக்குள் நுழைந்து, பியகம வீதியூடாக சென்று களனி சிரி சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள களனி ரஜ மஹா விஹாரையின் பிரதான வாயிலுக்குள் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று, (23) பிற்பகல் 03.00 மணி முதல் பெரஹெரா முடியும் வரை, பெரஹெரா பயணிக்க திட்டமிடப்பட்டுள்ள பாதையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். அதன்படி போக்குவரத்துத் திட்டம் பின்வருமாறு செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொட டயர் சந்திப்பிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் நுங்கங்கொட சந்தியிலிருந்து தொரண சந்தி நோக்கி திருப்பி விடப்படும்.
பியகம வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் களனி ரஜ மஹா விஹாரைக்கு அருகிலுள்ள பியகம வீதியிலிருந்து கங்வெல்ல வீதி வழியாக களனி சிரி சுற்றுவட்டத்திற்கு திருப்பி விடப்படும்.
பேலியகொடையில் இருந்து பியகம நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் களனி சிறி சுற்றுவட்டத்தின் ஊடாக களனி ரஜமஹா விகாரையின் கங்வெல்ல வீதியில் பியகம வீதி, வாஹல்கட நோக்கி செலுத்தப்படும்.
பெரஹெர நடைபெறும் களனி சிறி சுற்றுவட்டம் முற்றிலுமாக மூடப்படும்.
முல்லேரியா – பியகம வீதியில் பியகம நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஊர்வலத்தின் முன் பகுதி விஹார மாவத்தை சந்திக்கு வரும் வரை மட்டுமே வெளியேற வேண்டும்.
பியகம வீதியில் வரும் அனைத்து வாகனங்களும் களனி ராஜ மஹா விஹாரைக்கு அருகிலுள்ள பியகம வீதியிலிருந்து கங்வெல்ல வீதி வழியாக களனி சிரி சுற்றுவட்டத்திற்கு திருப்பி விடப்படும்.
ஊர்வலத்தின் முடிவில், முழுப் பகுதியும் வாலன்கடவிற்கு அருகில் இருந்து விஹார மாவத்தைக்குள் நுழைவதால், நுங்கங்கொடையிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் விடுவிக்கப்பட்டு, பியகமவிலிருந்து வராகொட வீதிக்குள் நுழைய விடுவிக்கப்படும்.
பெரஹெர களனி சிரி சுற்றுவட்டத்தை நெருங்கும் போது, வாஹல்கட வழியாக பியகம வீதிக்குள் நுழைவது நிறுத்தப்பட்டு, வீதி வழமைக்கு தயார் செய்யப்படும்.
பியகம வீதியிலிருந்து வரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வராகொட நோக்கி அல்லது விஹார மாவத்தை சந்தியூடாக திருப்பி விடப்படும்.
பேலியகொடை பட்டிய சந்தி, கண்டி வீதி மற்றும் பட்டிய சந்தி வழியாக வராகொட வீதிக்குள் நுழையும் வாகனங்கள் தொரண சந்தியில் இருந்து திருப்பி விடப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Jili games are my new favourite and Jilioklink.com seems to know all about ’em. It’s worth a look: jilioklink