இலங்கையில் Shell லுப்ரிகண்ட் எண்ணெய்களின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக செயற்படும் Delmege Energy, இரு பிரபலமான வர்த்தகநாம தூதுவர்கள நியமித்து, Shell நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட லுப்ரிகண்ட் எண்ணெய்கள் தொடர்பில் பயனர்களிடையே பாவகனயாளர்ளிகடயய அது தொடர்பான ஈடுபாட்டையும் அதிகரிப்பதற்கான ஒரு வியூக முயற்சியை ஆரம்பித்துள்ளது. இந்த நியமனங்கள், இலங்கையிலுள்ள கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பாவளையார்கைிளையய Shell வர்த்தகநாமத்தின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இலங்கையின் நம்பர் 1 கார் பந்தய சம்பியனும் புகழ்பெற்ற வாகன ஆர்வலருமான அஷான் சில்வா, கார்களுக்கு உகந்த Shell மசகு எண்ணெய்களின் வர்த்தகநாம தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். வாகன ணெயல்திறன தொடர்பான விரிவான அனுபவத்தையும், உயர் எஞ்சின் பராமரிப்புக்கான ஆர்வத்தையும் கொண்ட இவர் மூலம், கார் வைத்திருப்போர் தங்களுடைய எஞ்சின்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வழங்க Shell லுப்ரிகண்ட்களைத் தெரிவு செய்ய ஊக்குவிக்கப்படுவர்.
இந்த கூட்டாண்மை தொடர்பில் கருத்து வெளியிட்ட, அஷான் சில்வா: “எமது வாகன எஞ்சினுக்குள் செலுத்தப்படுகின்ற எந்த ஒரு விடயமும், வாகனத்தின் தரத்தை பேணுவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில் Shell லுப்ரிகண்ட்கள் தொடர்ச்சியாக சிறந்த செயல்திறனையும் நம்பகத்தன்மையையும் வழங்குவதை உறுதி செய்கின்றன. உலகம் முழுவதும் நம்பிக்கைக்குரிய ஒரு வர்த்தகநாமத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமை அடைகிறேன்.” என்றார்.
இதேவேளை, 2024 இலங்கை தேசிய சம்பியனும், இந்திய CEAT சுப்பர்குரோஸ் லீக் போட்டியில் 5ஆவது இடத்தைப் பெற்றவருமான மோட்டார்சைக்கிள் ஓட்டப்பந்தய வீரர் ஜக் குணவர்தன, மோட்டார் சைக்கிள்களுக்கு உகந்த Shell லுப்ரிகண்ட் எண்ணெய்களின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் பராமரிப்பில் இவருடைய ஆழ்ந்த அனுபவம் காரணமாக, நாட்டின் யமாட்டார் கெகிள்
ஓட்டுநர்ைளுடனஒரு இணைப்பை ஏற்படுத்தி, Shell Advance லுப்ரிகண்ட்களின் சிறப்பான செயல்திறனையும் நம்பகத்தன்மையை பற்றியும் எடுத்துக் கூறி அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளார்.
ஜக் குணவர்தன இந்த கூட்டு முயற்சி தொடர்பில் தெரிவிக்கையில்: “ஒரு பந்தய வீரர் எனும் வகையிலும் மோட்டார்சைக்கிள் பயன்படுத்துபவர் எனும் வகையிலும் நோக்குகையில், எஞ்சின் செயல்திறனும் பாதுகாப்பும் ஒருபோதும் தவிர்க்க முடியாதவையாகும். Shell Advance லுப்ரிகண்ட் எனக்கு நம்பிக்கையை வழங்குகிறது. இதன் அனுபவத்தை ஏனைய பைக்கர்களுடனும் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.
Delmege Energy நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் ரஜித குலசேகர, தெரிவிக்கையில், “இந்த கூட்டாண்மையானது வழக்கமான விளம்பர முகங்களை தாண்டி, உண்மையான வாகன ஆர்வலர்களுடன் நெருக்கமாக இணைவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. அதற்கமைய செயல்திறனுடன் வாழ்ந்து அதனை அனுபவிக்கும் நபர்களின் குரல்கள் மூலம் நாம் நம்பிக்கையை உருவாக்குகிறோம்.” என்றார்.
Vallibel One/Delmege Ltd நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தினுஷா பாஸ்கரன், இது குறித்து கருத்து வெளியிடுகையில், “இந்த இருவரையும் Delmege Energy குடும்பத்தில் வரவேற்பதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். வாகனங்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் துறைகளில் இவர்களின் ஆர்வமும் நம்பகத்தன்மையும் எஞ்சின் பராமரிப்பில் Shell லுப்ரிகண்ட்களின் விசேடத்துவத்தை வலுப்படுத்துவதற்கான சிறந்த தூதுவர்கள் இவர்கள் என உறுதிப்படுத்துகின்றது.” என்றார்.
இந்த பிரசாரத்தின் அங்கமாக, டிஜிட்டல் ஊடகங்கள், நேரடி நிகழ்வுகள், பயிற்சி கருத்தரங்குகள் உள்ளிட்ட பலதரப்பட்ட செயற்பாடுகளில் இத்தூதுவர்கள் இருவரும் தங்களது பங்களிப்பை வழங்குவார்கள்.
உலகின் முதல் தர முழுமைப்படுத்தப்பட்ட லுப்ரிகண்ட் வழங்குநர் எனும் பெயருடன் 18 வருடங்களாக திகழும் Shell, புதிய நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ள லுப்ரிகண்ட் எண்ணெய்களை வடிவமைத்து, சிறந்த செயல்திறனையும் சிறந்த எரிபொருள் பயன்பாட்டையும் உறுதி செய்கிறது. இது இலங்கையிலுள்ள வாகன சாரதிகளின் உயர் தரங்களுக்கான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றதாக விளங்குகின்றது.
இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ்…
With empowerment and patronage from Samaposha, the country's most popular breakfast cereal, the 'Samaposha Provincial…
இலங்கையின் மிகப் பிரபலமான இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான FACETS Sri Lanka 2026, மாற்றத்தின் அடையாளத்துடன் அதன் 32ஆவது…
Ministry of Digital Economy and SLT-MOBITEL pioneer national initiative Sri Lanka pioneers a new…
இலங்கையின் முன்னணி நீர்ப்பம்பி உற்பத்தியாளரும், புத்தாக்கமான நீர் முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகவும் விளங்கும் Agromax நிறுவனம், 2025 ஆம்…
Fonterra Brands Lanka, in collaboration with the Tertiary and Vocational Education Commission (TVEC), the National…