நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கியூபாவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகள்.. உதவும் சீனா, ரஷ்யா..
கியூபாவில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, சீன அரசின் உதவியோடு சூரியசக்தி மின்சார பூங்காகளை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால், பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருக்கும் மின் நிலையங்கள் பழுதடைவதால் அடிக்கடி நாடு தழுவிய அளவில் மின்வெட்டுகள் ஏற்படுகின்றன.
இந்தாண்டுக்குள், ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட சூரியசக்தி மின்சார பூங்காகளை அங்கு அமைத்து தர சீனா முன்வந்துள்ளது.

