8 அணிகள் மோதும் 9வது ICC Champions கிண்ண கிரிக்கெட் போட்டி வெப்ரவரி 19ஆம்திகதி பிற்பகல் 2.30க்கு கராச்சியில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் நடப்பு செம்பியனான பாகிஸ்தானும் நியூசிலாந்துதும் மோதுகின்றன.
இந்தமுறை பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா பாக்கிஸ்தான் மோதும் முதல் போட்டி இம்மாதம் 23ம் திகதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் போட்டிகள் ஆரம்பமாகும் கராச்சி மைதானத்தில் தொடரில் விளையவுள்ள அணிகளின் நாட்டு தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
மொத்தமாக 8 கொடிகள் இருக்க வேண்டிய இடத்தில் 7 கொடிகள் மாத்திரமே காணப்படுகின்றது. இந்திய கொடியை அவர்கள் அங்கே பறக்கவிடவில்லை.இதற்கான விளக்கத்தையும் இதுவரை பாக்கிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவிக்கவும் இல்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.
இனம், மொழி, நாடு தாண்டி கிரிக்கெட் என்பது ஒரு கணவான்கள் விளையாடும் விளையாட்டென்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று(மார்ச் 14)…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும்…
பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (மார்ச்…
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில்…
கிராம சேவையாளர்கள் இன்று (மார்ச் 14) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். பெண் கிராம சேவையாளர்களின்…
மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (மார்ச் 14) அதிகாலை சகோதரிகளான பெண்கள்…