இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
குற்றச்செயலை தடுப்பதற்கு பொலிஸாரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் அறிந்தவர்கள் அல்லது அயலவர்கள் மற்றும் சமூகத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட பொலிஸாரால் தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.