கொட்டகலையில் ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை புனரமைப்பதற்கு  அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை  இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (13) மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  லோகில் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்  கொட்டகலையில் உள்ள லோகில் தோட்ட நுழைவாயிலுக்கு அருகில் குறித்த போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *